தூத்துக்குடி, ஆக. 3: தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் மாப்பிள்ளையூரணியில் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக மகளிரணி நிர்வாகிகள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம், மாப்பிள்ளையூரணி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ். தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். மாநில மகளிரணி பிரசார குழு செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஜெசி பொன்ராணி பேசுகையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மகளிருக்கு என்று இலவச பேருந்து பயண திட்டம் நடைமுறையில் உள்ளது.
அடுத்து செப்.15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரவுள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு என பல சாதனைகளை செய்துள்ள திமுக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் வீடுகள்தோறும் கொண்டு சேர்க்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு திமுக மகளிரணி பங்கு அதிகம் இருக்க வேண்டும். தலைமை கழகம் அறிவிக்கும் உத்தரவிற்கிணங்க மகளிரணியினர் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும், என்றார். கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளரும், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவருமான சாரதா பொன்இசக்கி, தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மகளிரணி சிவபாலா, எபன், மரிய ஜெயரூபி, மாரியம்மாள், நூர்ஜஹான் அப்பு, பாலசுந்தரி, அந்தோணி வளர்மதி, இசக்கியம்மாள், குரீஸ்வரி மற்றும் பஞ். உறுப்பினர் பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.