தூத்துக்குடி, ஆக. 19: தூத்துக்குடி ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு 54 குத்துவிளக்குகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.தூத்துக்குடி மாநகராட்சி நான்காவது வார்டு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள தேவி ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் கொடை விழா ஆரம்பமாகியுள்ளது. இந்த கோயிலுக்கு 54 புதிய வெண்கல குத்துவிளக்குகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், 4வது வட்ட செயலாளர் சதீஷ்குமார், கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, தேவேந்திரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.