தூத்துக்குடி, ஆக. 7: தூத்துக்குடி அருகே வேன் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை ராஜிவ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (63). இவர், புதுக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்ற வேன், இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து புதுக்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து வேனை ஓட்டி வந்த முத்தையாபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த சாமுவேல்ராஜ் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே வேன் மோதி முதியவர் பலி
previous post