விளாத்திகுளம், ஆக. 30: தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு 2ம் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை குறித்த குறிப்பாணைகளும், அறிவிக்கைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள் ஜெயம்கொண்டம் தொகுதி கண்ணன், சேலம் தெற்கு பாலசுப்பிரமணியன், திண்டிவனம் தொகுதி அர்ஜூனன், சாத்தூர் தொகுதி ரகுராமன், வில்லிபுத்தூர் தொகுதி மான்ராஜ், விளவங்கோடு தொகுதி தாரகை கத்பட் மற்றும் சட்டமன்ற பேரவை அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.