தூத்துக்குடி,நவ 10: தூத்துக்குடியில் வீட்டருகே மது அருந்தியதை கண்டித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி புதிய முனியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி (45). இவரது வீட்டின் எதிரேயுள்ள காலி இடத்தில் அப்பகுதியை சேர்ந்த மாரிசெல்வம் (19), பூப்பாண்டியா புரத்தை சேர்ந்த மந்திரம் (19) ஆகிய 2 பேரும் அமர்ந்து மது அருந்தினர். இதைப் பார்த்த செல்வி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் அவரை அவதூறாக பேசியதோடு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார், மிரட்டல் விடுத்த மாரிசெல்வம், மந்திரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் வீட்டருகே மது அருந்தியதை கண்டித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் வாலிபர்கள் இருவர் கைது
0
previous post