தூத்துக்குடி, நவ. 29:தூத்துக்குடியில் மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி துரைசிங் நகரைச் சேர்ந்தவர் ரொட்ரிக்கோ (45). மீனவரான இவர், குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் மீனவர் தற்கொலை
0