தூத்துக்குடி, ஆக. 20: தூத்துக்குடியில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார் சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், பேவர் பிளாக் சாலை போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விரிவடைந்து வரும் பகுதிகளில் குடிநீர் சீராக வழங்குவதற்காக புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கங்கா பரமேஸ்வரி காலனி, செல்வநாயகபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கல்லூரி நகர் உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெற்று வரும் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.