தூத்துக்குடி, ஜூன் 18: தூத்துக்குடியில் சோலார் திட்டம் தொடர்பான சிறப்பு முகாமை கனிமொழி எம்பி துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்வில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் ரூப்டாப் சோலார் திட்டத்தினை பயன்படுத்துவது தொடர்பாக 5 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. தனசேகர்நகர் பூங்கா அருகில் நடத்தப்பட்ட முகாமை கனிமொழி எம்.பி. துவக்கிவைத்துப் பார்வையிட்டார். இதையடுத்து தூத்துக்குடி – தருவை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்துவைத்த அவர் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சிகளில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், துணைப் பொறியாளர் சரவணன், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, சுப்புலட்சுமி, ஜாக்குலின் ஜெயா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடியில் சோலார் திட்ட சிறப்பு முகாம்
0
previous post