தூத்துக்குடி, மார்ச் 4: தூத்துக்குடியில் சுதா கருத்தரிப்பு மைய புதிய கிளை திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடியில் சுதா கருத்தரிப்பு மையம், புதிய கிளையை தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனையில் துவங்கி உள்ளது. இதையொட்டி குழந்தையில்லா தம்பதியருக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் சுதா கருத்தரிப்பு மையத்தின் நிர்வாக இயக்குநர் சுதாகர் கூறுகையில், சுதா கருத்தரிப்பு மையமானது கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. குழந்தையின்மை சிகிச்சையானது எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கோடு செயல்பட்டு வருகிறது. எங்கள் மருத்துவமனையில், குழந்தையின்மைக்கான IUI, IVF/ICSI போன்ற அனைத்து சிகிச்சைகளும், இத்துறையில் தேர்ந்த மருத்துவரை கொண்டு அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அளிக்கிறோம், என்றார்.
தூத்துக்குடியில் சுதா கருத்தரிப்பு மைய புதிய கிளை திறப்பு விழா
0
previous post