நெல்லிக்குப்பம், ஜூலை 19: நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அஞ்சாபுலி மகன் சேகர்(49). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பைக்கில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிந்து காலில் அறுவை சிகிச்சை செய்து பிளேட் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலில் ஏற்பட்டு வரும் வலியின் காரணமாக சரியான முறையில் வேலைக்கு செல்ல முடியவில்லை. போதுமான மருத்துவ சிகிச்சை பார்க்க முடியாமலும் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்கு போட்டு எலக்ட்ரீசியன் சாவு
69
previous post