துவரங்குறிச்சி, செப்.1: திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் இக்கரை கோசிகுறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை மருங்காபுரி ஒன்றிய குழு தலைவர் பழனியாண்டி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ரபீக் ராஜா மற்றும் இக்கரை கோசி குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பொது மருத்துவம், சர்க்கரை நோய், உப்பு நீர் மற்றும் தொழுநோய், ஆஸ்துமா சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை பெற்றுச் சென்றனர்.
நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் இயற்கை முறை உணவுகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.மேலும் முகாமிற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு இலவச மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர், மற்றும் ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் என பெரும் திரளான நாள் கலந்து கொண்டனர்.