துவரங்குறிச்சி, நவ.19: தேசிய நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியனில் வளர்ந்து நிற்கும் செடிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலைகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன்களில் தற்போது மழைக்காலம் என்பதால் அதிக அளவில் புட்கள் மற்றும் செடிகொடிகள் வளர்ந்து நிற்கின்றன. மேலும் செடிகள் அனைத்தும் சாலையில் படர்ந்து இருப்பதால் சென்டர் மீடியன் எது சாலை எது என்று தெரியாத அளவிற்கு உள்ளது.
மேலும் செடிகள் அதிக அளவில் வளர்ந்து நிற்பதால் கால்நடைகள் மேய்ந்த வண்ணம் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகளும் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் புட்களை அகற்றி போக்குவரத்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலை ஓரங்களில் உள்ள முட்செடிகளையும் அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.