துவரங்குறிச்சி, ஆக.15: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த முக்கண்பாலம் சொக்கநாதப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 14 வருடமாக கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜேஸ்வரி. இவர் இடமாறுதல் பெற்று அவரது சொந்த ஊரான திருப்பூருக்கு சென்ற நிலையில், இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியருக்கு பிரியா விடை அளிக்கும் வகையில் பழத்தட்டுகள், பலகார தட்டுகள் போன்ற சீர்வரிசை தட்டுகளுடன் முக்கண்பாலத்தில் இருந்து அவர் பணியாற்றிய பள்ளி வரை ஆசிரியையை ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் கணித ஆசிரியர் ராஜேஸ்வரி முன்னாள் மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான பல உதவிகளை செய்ததால் அவர் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.