துறையூர், ஜூன்27: துறையூர் பெரம்பலூர் புறவழிச் சாலை 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்ட உயர் மின் விளக்குகளை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா முதல் பெரம்பலூர் சாலை வரை உள்ள 3.5 கிலோமீட்டர் தொலைவிற்கு புறவழிச் சாலை பகுதியில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.90 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து புதிதாக அமைக்கப்பட்ட உயர் மின்விளக்குகளை நகராட்சி நிருவாக துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சரவணன், எம்எல்ஏக்கள் துறையூர் ஸ்டாலின் குமார், முசிறி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் கதிரவன், மாவட்ட ஊராட்சி குழு முன்னால் தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சிவ சரவணன், வீரபத்திரன் ,கலை இலக்கிய பகுத்தறிவு மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சரண்யா மோகன் தாஸ், மாவட்ட அமைப்பாளர் சுற்றுச்சூழல் அணி அம்மன் பாபு உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.