துறையூர், மே 19: திருச்சி மாவட்டம் துறையூர் நகர திமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாலக்கரை மற்றும் சிலோன் ஆபீஸ் ஆகிய 2 இடங்களில் நடைபெற்றது. நகர செயலாளர் மெடிக்கல் முரளி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,
வீரபத்திரன், சிவ சரவணன், மாவட்ட கலை இலக்கிய பிரிவு தலைவர் கஸ்டஸ் மகாலிங்கம், நகர் மன்ற உறுப்பினர்கள் வீர மணிகண்டன், கார்த்திகேயன், சுமதி , இளையராஜா, ஜானகிராமன், நகர துணை செயலாளர் இளங்கோவன், பிரபு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிலம்பரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்பு விரு ந்தினராக கலந்து கொண்ட தலைமை கழக பேச்சாளர் ராமச்சந்திரன் பேசுகையில், பல்வேறு நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களின் நலனுக்காக செய்து வருகிறார். தொடர்ந்து நலத்திட்டங்கள் கிடைத்திட வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் உதயசூரியனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். முடிவில் வார்டு செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.