துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை துறையூர் நகராட்சி 16 வார்டில் உள்ள புதுத்தெருவில் வீடு வீடாக சென்று இணையதளம் வழியாக செல்போன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற வீடுகளில் ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்நிகழ்ச்சி நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, மாவட்ட அமைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி சேகர், நகரத் துணைச் செயலாளர் பிரபு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் திருமூர்த்தி, மாவட்ட, பிரதிநிதி கார்த்திகேயன், சுதாகர், வார்டு செயலாளர்கள் செல்லதுரை, நல்லுசாமி, சசிகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.