துறையூர், ஆக.4: துறையூர் சிலோன் ஆபீஸ் அருகில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சிரசு எடுக்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக துறையூர் மூங்கில் தெப்பக்குளத்தில் இருந்து கரகம் பாலித்து சிவன், பார்வதி, கருப்பண்ணசாமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். விழாவில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் திருவிழாவில் பரம்பரையாக சிரசு எடுக்கும் வகையறாவை சேர்ந்த தினேஷ் என்பவர் சிரசு எடுத்து ஊர்வலமாக கோயில் சன்னிதானத்தை அடைந்தார்.
துறையூரில் திரவுபதி அம்மன் கோயிலில் நல்லரவாண் சிரசு எடுக்கும் விழா
previous post