துறையூர், நவ.16: திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் அமைந்துள்ளது சின்ன ஏரி. இந்த ஏரி நீர்வளத் துறை பராமரிப்புள்ள சின்ன ஏரி கரைகள் வலுவிழந்து உள்ளதாகவும், மதகுகள் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு பாசனத்திற்கு சரிவர தண்ணீர் வராத நிலையில்உள்ளது. மேலும் மதகுவிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன வாய்க்கால்கள் தூர்ந்து மண் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.
விளை நிலங்களுக்கு ஏரி நீர் கிடைக்காததால் விவசாயிகள் சிரமப்படுவதாக கூறுகின்றனர். எனவே சின்ன ஏரியை தூர்வாரி ஏரிக்கரையை பலப்படுத்தவும், பாசன மதகினை மறு கட்டுமானம் செய்து ஏரியின் பாசன வாய்க்கால்களை புனரமைத்து தர வேண்டுமென துறையூர் பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் அரியாறு வடிநிலக் கோட்டம் நீர்வளத் துறை அலுவலகத்தில் மனு அளித்தார்.