தாராபுரம், ஜூலை 22: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புது காவல் நிலைய வீதியில் பழமையான துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி நேற்று அம்மனுக்கு அக்கனி குண்டம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிவியர் சமுதாயத் தலைவர் தில்லை முத்து, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணைத்தலைவர் சசிகலா ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நாட்டு மக்களின் நலன் வேண்டியும் மக்களின் நல்லாட்சி தொடர வேண்டிய விவசாயம் தொழில் வளம் சிறந்து விளங்க வேண்டிய யாக பூஜையில் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.இதில் நகர செயலாளர் முருகானந்தம், நகர துணைச்செயலாளர் தவச்செல்வன், நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் கோவிந்தராஜ், கோவில் நிர்வாக குழு ராஜ்குமார், ஆரோன் செல்வராஜ் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.