தூத்துக்குடி, ஆக.24: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துப்பாஸ்பட்டியில் இருந்து அரசரடி பனையூர் வரை தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துப்பாஸ்பட்டியில் இருந்து அரசரடி பனையூர் வரை ₹73.80 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியின் துவக்க விழாவிற்கு சண்முகையா எம்எல்ஏ தலைமை வகித்து பணியை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி மற்றும் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் மற்றும் கீழஅரசரடி ஊராட்சி மன்ற தலைவர் ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
துப்பாஸ்பட்டி-அரசரடி பனையூர் சாலை பணி
previous post