சேந்தமங்கலம், ஆக.7: சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளம், பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து மைதானத்தை மாதேஸ்வரன் எம்பி திறந்து வைத்தார். சேந்தமங்கலம் ஒன்றியம் துத்திக்குளம் பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், புதிதாக பெருமாயி அம்மாள் நினைவு கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் செங்கோட்டுவேலு தலைமை வகித்தார். செயலாளர் காஞ்சனா முன்னிலை வகித்தார். நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கலந்து கொண்டு கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்து பேசுகையில், இப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கூடைப்பந்து மைதானத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். கல்வி எவ்வளவு அவசியமோ உடலுக்கு விளையாட்டு அவ்வளவு ஆரோக்கியம். எனவே, மாணவ-மாணவிகள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றம் மாணவ -மாணவிகள் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் முதல்வர் சங்கீதா நன்றி கூறினார்.