மதுரை, நவ. 29: மதுரை மாநகர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பாக தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ ஆலோசனையின்படி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட ஏ.ஆர் லைன் பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் சொக்கிகுளத்தில் அமைந்துள்ள காக்கைப்பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் துரை கோபால் என்கிற அன்பு தலைமை வகித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பகுதிச் செயலாளர் புண்ணியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ஜெயராஜ், வட்டச் செயலாளர்கள் காத்தவராயன், சுரேஷ், பாக்யராஜ் என்ற ராஜேஷ், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் திலகவதி ஜெயராஜ், மாணவரணி சந்துரு மற்றும் திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.