வேலூர், செப்.3: வேலூர் சரகம் துணை போக்குவரத்து ஆணையர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் வேலூர் சரகம் துணை போக்குவரத்து ஆணையராக பணியாற்றி வந்த நெல்லையப்பன், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணை போக்குவரத்து ஆணையராக(சென்னை நிர்வாகம்) பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து விழுப்புரம் துணை போக்குவரத்து ஆணயராக பணியாற்றி வரும் பாட்டப்பசாமி, கூடுதல் பொறுப்பாக வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் துணை போக்குவரத்து ஆணையர் பாட்டப்பசாமி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆர்டிஓக்கள் சம்பத், ராமகிருஷ்ணன், காளியப்பன், பிரதீபா(அமலாக்கம்) மோட்டார் வாகன ஆய்வாளர், சிவராஜ் உட்பட பலர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.