காவேரிப்பட்டணம், ஜூன் 23: காவேரிப்பட்டணம் ஒன்றியம், சாப்பரம் கிராமத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு அசோக்குமார் எம்எல்ஏ தலைமை வகித்து, கட்டுான பணிகளை தொடங்கி வைத்தார். அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் மோகன், ஜெ. பேரவை ஒன்றிய செயலாளர் கேசவன், நகர செயலாளர் விமல், எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் கணேசன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய இணை செயலாளர் முனிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.