வந்தவாசி, ஆக. 14: வந்தவாசியில் வேலைக்கு சென்ற துணி கடை பெண் ஊழியரை கடத்திய பழக்கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது இளம் பெண். இவர் பஜார்வீதியில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு பொற்றோர் திருமணம் செய்ய உறவினர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை சென்ற இளம் பெண் வீடு திரும்ப வில்லை. இதனால் உறவினர் தெரிந்தவர்கள் வீடுகளில் தேடியும் இளம் பெண் கிடைக்காதால் கீழ்கொடுங்காலூர் போலீசில் தாய் புகார் செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் வந்தவாசி நகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் வந்தவாசி டவுன் கோட்டை பகுதியை சேர்ந்த பழக்கடை உரிமையாளர் காலேஷா(24) என்பவர் இளம்பெண்னை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து கீழ்கொடுங்காலூர் போலீசார் கடத்தல் வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
‘