கோபி, ஜூன் 27: கோபி அருகே உள்ள நஞ்சை கோபி ஊராட்சி, எல்லமடையை சேர்ந்தவர் கணேசன் (58). திமுக நிர்வாகியான இவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கணேசனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிறுவலூர் வெள்ளியங்கிரி, கோபி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் வெள்ளாளபாளையம் சீனிவாசன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நஞ்சை கோபி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.