அந்தியூர், ஜூன் 23: அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி சித்தா கவுண்டனூர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(50).விவசாயக் கூலி தொழிலாளியான இவரது குடிசை வீட்டில் மகள் சம்பூர்ணம் விறகு அடுப்பில் நேற்று காலை சமையல் செய்து கொண்டு இருந்தார்.அப்போது அடுப்பில் இருந்த தீ எதிர்ப்பாராத விதமாக குடிசையில் பட்டு தீப்பிடித்துள்ளது.
உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர்.
இருப்பினும் தீப்பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்த தட்டுமுட்டு சாமான்கள் எரிந்து சேதமாயின. அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைக்க உதவி செய்ததால் அருகில் இருந்த வீட்டிற்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.