குன்னம், ஆக. 17: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழுவின் கவுன்சிலர் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தணிக்கை அறிக்கைகள் மற்றும் பல்வேறு செலவினங்கள் குறித்ததீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வராணி வரதராஜ், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பூங்கொடி முன்னிலை வகித்தனர், முன்னதாக மேலாளர் ஜுலி வரவேற்றார்.
இதில் செலவினங்கள் குறித்தும், ஊராட்சி ஒன்றிய சில்லறை செலவினங்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதில் திமுக உறுப்பினர்கள் அ.கருணாநிதி, கருனாநிதி, பழனிவேல், கருப்பையா, ஆண்டாள், தேவராஜன், மலர்கொடி, ம.மலர்கொடி, தனலட்சுமி, உமா, அதிமுக உறுப்பினர்கள் சுகந்தி, செல்லம்மாள், மகேஸ்வரி, மணிகண்டன், அழகுதுரை, பமக உறுப்பினர்கள் சுப்புரமணியன், கலா, காவேரி, ஊராட்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கணிணி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.