தாராபுரம், ஆக.4: விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தாராபுரத்தில் உள்ள அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தனது முகாம் அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், நகர துணைச் செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், நகர அவை தலைவர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், கவுன்சிலர்கள் அன்பழகன், மரக்கடை கணேஷ், அப்பாஸ் அலி,உட்பட திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.