அலங்காநல்லூர், ஆக. 4: அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய துணை சேர்மன் சங்கீத மணிமாறன், நகர செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் அருண் விளையாட்டு மேம்பாட்டு அணிய பிரதாப், சமூக ஆர்வலர் சங்கர் கணேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், தமிழ்நாடு கொங்கு இளைஞர்கள் பேரவை, பாமக, மநீம, கவுண்டர்கள் உறவின்முறை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் தீரன் சின்னமலை சிலை மற்றும் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தீரன் சின்னமலைக்கு மாலை எம்எல்ஏ வெங்கடேசன் அணிவித்தார்
previous post