திருச்செங்கோடு, ஆக. 4: தீரன் சின்னமலையின் 219வது நினைவு தினத்தையொட்டி, திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், தீரன் சின்னமலையின் படத்திற்கு திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் கொமதேக மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல், தெற்கு நகர செயலாளர் அசோக்குமார் மற்றும் வடக்கு நகர செயலாளர் சேன்யோகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், ரமேஷ், மனோன்மணி சரவணமுருகன், செல்லம்மாள் தேவராசன் கலையரசி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜவேல், முன்னாள் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அனிதா வேலு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மரியாதை செய்தனர்.
தீரன் சின்னமலைக்கு கொமதேக மரியாதை
previous post