ஆலங்குடி, ஜூலை 16: ஆலங்குடியில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. ஆலங்குடியில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தில் தீயணைப்பு துறை சார்பில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இதில் கேஸ் ஏஜென்சி மேலாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு தீயணைப்பு துறையினரால் தீ விபத்தை எவ்வாறு தடுப்பது, தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைகள், இயற்கை பேரிடர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் கலிபுல்லா நகரில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் தீயணைப்பு துறை அலுவலர் மற்றும் பணியாளர்களால் நடத்தப்பட்டது.