சிவகங்கை, ஜூலை 1: சிவகங்கையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிவகங்கை மாவட்ட மாநாடு ஆகஸ்ட் மாதம் சிவகங்கையில் நடைபெறுவதையொட்டி இக்கூட்டம் நடைபெற்றது. வரவேற்பு குழுத் தலைவராக விசுவநாதன் வரவேற்பு குழு செயலாளராக முத்துராமலிங்கபூபதி, பொருளாளராக வேங்கையா தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் செல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வீரையா, மாவட்ட பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.