ஆறுமுகநேரி, ஆக. 15: பழையகாயல் அருகே புல்லாவெளி வைரவன் நகரை சேர்ந்தவர் பலவேசம் மனைவி மாரிச்செல்வி(38). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். பலவேசம் வீட்டு செலவுகளுக்கு பணம் கொடுக்காமல் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாரிச்செல்வி நேற்று முன்தினம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றிரவு மாரிச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரிச்செல்வியின் தாயார் சந்திரகனி(55) கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் எஸ்ஐ சுந்தரம் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொ) ஷேக் அப்துல் காதர் விசாரித்து வருகிறார்.
தீக்குளித்த பெண் சாவு
previous post