திருவண்ணாமலை, ஜூன் 10: திருவண்ணாமலையில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில், நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. அதனால், நகரின் பெரும்பாலான சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் குளம் போல் மழை வெள்ளம் தேங்கியதால் பயணிகள் தவித்தனர். திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து அறிவொளிப் பூங்கா வரை மற்றும் பெரியார் சிலை சந்திப்பு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் திணறினர். ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே திருவண்ணாமலை தத்தளித்தது குறிப்பிடத்தக்கது.
தி.மலையில் இடியுடன் கனமழை
0