தஞ்சாவூர், மே18: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அமர்சிங் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் செயல்பாடுகள் குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் அருணகிரி வரவேற்றார்.
திராவிடர் கழக கிராமப் பிரசார குழு மாநில அமைப்பாளர் அதிரடி அன்பழகன், தலைமை கழக அமைப்பாளர் குருசாமி, திராவிடர் கழக காப்பாளர் அய்யனார் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.கூட்டத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா- கூட்டங்களை மாவட்ட முழுவதும் பரவலாக நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பூதலூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி நன்றி கூறினார்.