செய்முறைமுதலில் பசும்பாைலக் காய்ச்சி, பால் பொங்கி வரும்போதே whey water பால் உடைந்தவுடன் அதை அப்படியே கலக்காமல், மிதமான தீயில் சிறிது நேரம் வைக்கவும். பின்னர் அதை மெலிதான துணியில் வடிகட்டினால் மிருதுவான பனீர் கிடைக்கும். அந்தத்துணியை எடுத்து மூட்டை கட்டி, தண்ணீர் தானே வடியும் வரை வைத்து பிறகு ஒரு தட்டில் கொட்டி சுமார் அரை மணி நேரம் கைவிடாமல் அழுத்திப் பிசையவும். விருப்பப்பட்டால் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கலாம்.சர்க்கரை கரைந்து தண்ணீர் கொதி வந்தபின், நன்றாக அழுத்திப்பிசைந்து வைத்துள்ள பனீரை இதய வடிவில் செய்து ஒவ்வொன்றாக எடுத்து பாகில் போடவும். பனீர் உப்பி மிதந்து வரும். அவைகளை ஒவ்வொன்றாக எடுத்து, தயாராக வைத்துள்ள சுடுதண்ணீரில் போடவும். இப்போது அடுப்பிலிருக்கும் சர்க்கரைப் பாகை மேலும் பத்து நிமிடத்திற்கு கொதிக்க வைத்து, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு, வெந்நீரில் வைத்துள்ள தில் பஹாரைப் போட்டு ஊற விடவும்.பால் கோவா, பொடி செய்த சர்க்கரை இவை இரண்டையும் நன்றாகக் கலந்து ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்துக்கிளறி கடாயிலிருந்து எடுத்து ஆறிய பின் தில் பஹாரின் மேல் நன்றாக தடவி விடவும். முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு முதலியவற்றைத் துண்டு துண்டாக நறுக்கி மேலே தூவி, செர்ரியுடன் அலங்கரித்துப் பரிமாறவும்.