சிதம்பரம், அக். 18: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயிலில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று சாமி தரிசனம் செய்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோயிலுக்கு, புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி நேற்று வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்து சென்றனர். பின்னர் அவர், தில்லை காளியம்மனை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் குருக்கள், பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அவர் புதுச்சேரி புறப்பட்டு சென்றார்.