திருவொற்றியூர், ஜூன் 26: சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் வார்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் சன்னதி தெரு திமுக அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன் முன்னிலை வகித்தார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கட்சியின் பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ ஏற்பாட்டில் வரும் 27ம் தேதி மாதவரத்தில் நடைபெற உள்ள பாக முகவர்கள் பிஎல்ஏ 2 கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தி.மு.தனியரசு ஆலோசனை வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.