திருவையாறு,மே 28:திருவையாறு அருகே திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் மீட்பு
திருவையாறு அருகே திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் மீட்க பட்டு திருக்கோயில் அறங்காவலர் செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவையாறு அடுத்த திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான நஞ்சை நிலம் நீண்ட வருட காலமாக திருக்கோவிலுக்கு குத்தகை செலுத்தாதன் காரணமாக கோயில் நிர்வாகம் தஞ்சை வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டன வழக்கு தொடுக்கப்பட்டதின் பெயரில் திருக்கோவிலின் வசம் தீர்ப்பு. தீர்ப்பின் அடிப்படையில் தஞ்சை வருவாய் நீதிமன்ற ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் நஞ்சை நிலத்தை மீட்டு திருக்கோயிலின் அறங்காவலர் வெங்கடாஜலம் மற்றும் செயல் அலுவலர் ராஜரத்தினம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இவர்களுடன் நடுக்காவேரி காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர், திருக்கோவிலின் எழுத்தர்கள் பஞ்சநாதன், செந்தில்குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் இருந்தார்கள்.