திருவையாறு, ஜூன் 30: திருவையாறு அருகே அந்தணர்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் நடேசன் (44 ) தந்தை இறந்துவிட்டார். தாய் மற்றும் அத்தையுடன் மாடி வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக வேஷ்டியில் தூக்கிட்டு கொண்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.