திருச்சி, மே 30:திருவெறும்பூர் பகுதியில் இன்று மின்விநியோகம் இருக்காது என்று மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (மே.30) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை போலீஸ் காலனி, காவேரி நகர், சிலோன் காலனி, அண்ணா நகர், பிள்ளையார் கோவில், அய்யனார் கோவில், டிஎன்யுடிபி, எம்ஜிஆர் நகர், கும்பக்குடி, கும்பக்குடி சிட்கோ, பட்டவெளி மற்றும் பர்மாகாலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
கே.சாத்தனுார்:
கே.சாத்தனுார் துணைமின் நிலையத்தில் இன்று 30ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கே.கே. நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, S.S.M.E.E.S காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்ப நகர், LIC காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், R.V.S நகர், வயர்லெஸ் ரோடு, செம்பட்டு ஒரு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், JK நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனுார், வடுகப்பட்டி, பாரி நகர், காஜா நகர், RS புரம், TSN நகர் ஆகிய பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.