திருவெறும்பூர், மே 12: திருவெறும்பூர் அருகே இளம் பெண் உட்பட 2 பேரை கிண்டல் செய்து தாக்கிய ஆட்டோ டிரைவரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் நரேஷ்குமார் (32). இவரும், இவரது நண்பர் வித்யாபதியின் அக்கா முவியரசியும் மளிகை கடைக்குச் சென்றனர்.
அப்போது அங்கு வந்த வாழவந்தான்கோட்டை புது பர்மா காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சேவியர் டேனியல் ஜேக்கப், \”உன் நண்பர் வித்யாபதியை எப்படி ஜெயிலுக்கு அனுப்பினேன் பார்த்தியா? \” – என கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட இருவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் நரேஷ்குமாரும், முவியரசியும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நரேஷ்குமார் புகாரின் பேரில் துவாக்குடி எஸ்ஐ நாகராஜன் வழக்கு பதிந்து சேவியர் டேனியல் ஜேக்கப்பைக் (33) கைது செய்தார்.