திருச்சி, ஜூலை 1: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் தொகுதியில் காட்டூர் பெரியார் சிலை அருகில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் பயிற்சி முகாமினை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். முகாமில் கலந்து கொண்ட BLA2 மற்றும் BDA உறுப்பினர்கள் திமுக தலைவர் ஆணையை நிறைவேற்ற அயராது உழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், தொகுதி பொறுப்பாளர் மணிராஜீ, தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், சிவக்குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கருணாநிதி கங்காதரன் நகர கழக செயலாளர் காயாம்பு, பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு மற்றும் BLA2 மற்றும் BDA உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.