வேலூர்,ஆக.20: காட்பாடி அடுத்த வஞ்சூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் திருவிழா நடந்தது. அப்போது கொக்கலி கட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் அதேபகுதியை சேர்ந்த சக்திவேல்(27), குமார்(35) ஆகியோருக்கும் ஆதி(20), புஷ்பராஜ், பாலமுருகன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த நிலையில் மது போதையில் வந்த ஆதி, புஷ்பராஜ், பாலமுருகன் ஆகியோர் சக்திவேல், குமார் ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர். சக்திவேலுக்கு கழுத்தில் வெட்டு விழுந்தது. குமாருக்கு இடது பக்க கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. இதையடுத்து தாக்குதல் நடத்திய 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஆதி, பாலமுருகன் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள புஷ்பராஜை தேடி வருகின்றனர்.