குடியாத்தம், ஜூன் 6: குடியாத்தம் அடுத்த ஆர்எஸ் நகரில் நேற்று மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர்த் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது ஆர்எஸ் நகரைச் சேர்ந்த முருகன் (49), ராம லிங்க நகரைச் சேர்ந்த மோனிஷ் (25), ஆசிரியர் நகரைச் சேர்ந்த மஞ்சுநாதன் (25), விக்னேஸ்வரன் (26) ஆகிய 4 பேர் சாலையில் அட்டகாசம் செய்தனர். இவர்கள் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்ததும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டரை அடி நீள கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருவிழாவில் கத்தியுடன் ரகளை செய்த 4 பேர் கைது
0