நரசிங்கபுரம், ஆக.17: சேலம், ஆத்தூர் கோட்டை பகுதியில் அமைந்துள்ள காயநிர்மலேஸ்வரர் கோயிலில், நேற்று ஆடி கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, நேற்று காலை விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து 108 விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து, வெள்ளி கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிளக்கு பூஜை
previous post