திருவில்லிபுத்தூர், ஜூன் 2: திருவில்லிபுத்தூர் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் தங்கபாண்டியன், மேலாளர் பாபு மற்றும் நகர் நல அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், கந்தசாமி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவில்லிபுத்தூர் வார்டுகளில் நடைபெற இருக்கும் திட்டங்கள் பற்றியும் அதற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் பேசினார்.