திருவில்லிபுத்தூர், செப்.20: திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் சன்னதியில் 75 நாட்களுக்கு பிறகு நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதற்காக கோவிலில் இருந்த ஐந்து நிரந்தர உண்டியல்கள் மற்றும் மூன்று தற்காலிக உண்டியல்கள் அனைத்தும் மைய மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 65 ரூபாய் இருந்தது. நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஆய்வாளர் முத்து மணிகண்டன், கண்காணிப்பாளர் ஆவுடை தாய் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியில் கோயிலுக்கு வரும் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களும் கோயில் பணியாளர்களும் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணிக்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.