தக்கலை, செப்.5:தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு மூன்று முக்கு ஜங்ஷனில் வசித்து வருபவர் மாகீன்(63). இவர் சம்பவத்தன்று வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் வீட்டில் துாங்கி கொண்டிருந்த அவரது மகள் பாத்திமாவின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துள்ளார். உடனே சுதாகரித்துக் கொண்ட பாத்திமா மர்ம நபரின் கையில் சிக்கிய செயினை பிடித்துள்ளார். இதில் அரை பவுன் மர்ம நபர் கையில் சிக்கியது. அவரும் அந்த நகையுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இது தொடர்பாக தக்கலை போலீசில் மாகீன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.